தென்காசி:தென்காசி மாவட்டம் அச்சன்புதூரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மற்றும் சுரண்டையைச் சேர்ந்த திருமலை குமார் ஆகியோருக்கு முகம் தெரியாத ஒருவர், அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தான் வேலைவாய்ப்பு அலுவலத்தில் பணிபுரிவதாகவும், தனக்கு முக்கிய பிரமுகர்கள் பலரைத் தெரியும் என்று கூறி பழக்கமாகி உள்ளார். மேலும், ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, முத்துராமலிங்கத்திடம் இருந்து 6 லட்சத்து 80 ஆயிரத்து 800 ரூபாயும், திருமலை குமாரிடம் இருந்து 5 லட்சத்து 42 ஆயிரத்து 800 ரூபாயும் பெற்று மோசடி செய்துள்ளார்.
தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த முத்துராமலிங்கம் மற்றும் திருமலை குமார், தென்காசி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில், திருநெல்வேலி மாவட்டம், டவுன் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரின் மகன் பிச்சை கண்ணு (42) இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து பிச்சைக்கண்ணு தலைமறைவாய் இருந்ததால், மாவட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் தனராஜ் கணேஷ் அறிவுறுத்தலின்படி, காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையில் துணை ஆய்வாளர்கள் செண்பக பிரியா, தனசேகரன், கருப்பசாமி கோபி, சதிஷ் குமார் ஆகியோரோடு தனிப்படை அமைத்து பிச்சைக்கண்ணுவைத் தேடி வந்துள்ளனர்.