தென்காசி: குத்துக்கல்வலசை பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கொடூர கொலை சம்பவத்தில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகள் ஜாமினில் வெளிவந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக தென்காசி காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் இருந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில், அந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில் தென்காசி காவல் நிலையத்திற்கு குத்துக்கல்வலசை பகுதியில் இருந்து அம்பிகா என்ற ஒரு பெண்ணிடம் இருந்து ஒரு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அந்த அழைப்பில், குத்துக்கல்வலசை பகுதியை சேர்ந்த சில நபர்கள் தன் வீட்டிற்கு வந்து கலாட்டா செய்து வருவதாகவும், தன் வீட்டு கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் கொடுத்துள்ளார்.இதனையடுத்து விரைந்து சென்ற,தென்காசி போலீசார் அந்த நபர்களை பிடிக்க முயற்சி செய்தபோது,குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓட முயற்ச்சித்துள்ளனர்.