தென்காசி:மாவட்டத்தின் பல பகுதிகளில்சட்டவிரோதமாக மணல் திருடப்படுவதாக காவல் துறையில் பல புகார் வந்த வண்ணம் இருந்தது.
முன்னதாக கடையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வெங்கடாம்பட்டி பகுதியில், சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனடிபடையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்கின் முயற்சியில் மணல் கடத்தலை முற்றிலும் தடுப்பதற்கு தனிக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முக்கியமாக எல்லைப் பகுதிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.