தமிழ்நாடு

tamil nadu

யானையை விரட்டிய வனத்துறை அலுவலர்: யானையிடம் சிக்கி உயிரிழப்பு!

தென்காசி: குற்றாலம் அருகே உள்ள வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானையை விரட்டச் சென்ற வனத்துறை அலுவலர் யானை மிதித்து உயிரிழந்தார்.

By

Published : Aug 13, 2020, 1:52 PM IST

Published : Aug 13, 2020, 1:52 PM IST

யானையை விரட்டிய வனத் துறை அலுவலர்: யானையிடம் சிக்கி உயிரிழப்பு!
Elephant attack in tenkasi

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் கடந்த சில நாள்களாக ஐந்தருவி அருகே உள்ள தோட்டங்களில் ஒற்றை யானை சுற்றித்திரிவதைப் பார்த்த விவசாயிகள், இதுகுறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வனச்சரகர் பாலகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் 8 பேர் கொண்ட கும்பல், அப்பகுதியில் முகாமிட்டு, யானை நடமாட்டத்தைக் கண்காணித்து அந்த யானையை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 12) மாலையில் யானை மீண்டும் அப்பகுதிக்கு வந்ததைப் பார்த்த வனத்துறை அலுவலர்கள் தீப்பந்தங்களை காட்டி யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, யானை வனத் துறையினரை விரட்டியதில், குற்றாலம் வனச்சரகத்தில் பணிபுரிந்து வரும் நன்னகரத்தைச் சேர்ந்த வேட்டைத் தடுப்புக் காவலர் முத்துராஜ் (57) என்பவர், யானையிடம் சிக்கி உயிரிழந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற வனத்துறை அலுவலர்கள் அங்கிருந்து தப்பியோடினர். யானை அங்கேயே சுற்றித் திரிவதால், உயிரிழந்த முத்துராஜ் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து வனத்துறை அலுவலகத்தில் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் முகாமிட்டுள்ளனர்.

கூடிய விரைவில் யானையிடம் சிக்கி உயிரிழந்த முத்துராஜ் உடலை மீட்டு, யானையை விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details