தென்காசி: தண்ணீருக்காக வந்து மயக்கநிலையில் இருந்த கருவுற்ற புள்ளிமானை வனத்துறையினர் மீட்டனர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏராளமான அரிய வகை வன விலங்குகள், ஊர்வன வகையைச் சார்ந்த உயிரினங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இந்த நிலையில் தற்பொழுது வனப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் வன உயிரினங்களான மலைப்பாம்புகள், மான், கரடி, மிளா, யானைகள் உள்ளிட்டவைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியார் நிலங்களுக்குள் தண்ணீருக்காக வந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது.
புள்ளிமானை மீட்ட வனத்துறையினர் இந்த நிலையில் நேற்று(அக்.3) மாலை கடையநல்லூர் வனத்துறைக்குள்பட்ட கருப்பாநதி அணையின் பகுதியிலிருந்து வந்த கருவுற்ற புள்ளிமான் ஓன்று அந்தப் பகுதியிலுள்ள தனியார் தோட்டத்திற்கு தண்ணீர் குடிப்பதற்காக வந்துள்ளது.
ஆனால் தண்ணீர் கிடைக்காததால் மயக்கநிலையில் நடக்க முடியாமல் சுற்றி திரிந்து உள்ளது. இதனைக்கண்ட அந்தத் தோட்டத்தின் உரிமையாளர் கடையநல்லூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கவே உடனடியாக விரைந்து வந்த வனத்துறையினர் மானை பத்திரமாக மீட்டு முதலுதவி அளித்து, கருப்பாநதி நீர்த்தேக்க ஆற்றுப்படுகைக்கு கொண்டு சென்று விட்டனர்.
இதையும் படிங்க: அம்பலமான போலி என்கவுன்ட்டர் : கொல்லப்பட்ட அப்பாவிகளின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!