தென்காசிமாவட்டம் செங்கோட்டை அருகே தனியார் விளையாட்டு அகாடமி சார்பில் குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற சிலை கடத்தல் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், “மாணவர்கள் கேள்வி கேட்கும் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு அவர்கள் தைரியத்துடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு மாணவர்கள் தைரியத்துடன் செயல்படுவதற்கு ஆன்மீகத்தை பின்பற்ற வேண்டும்” என்று கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ”சிலை காப்பகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் தெய்வ விக்கிரகங்கள் சிறைக் கைதிகளாக உள்ளது. இவை பொதுமக்கள் வழிபாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும். இதுகுறித்து தமிழக முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளேன்.