தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி: தென்காசியில் பூவின் விலை கிடுகிடுவென உயர்வு!

தென்காசி: தீபாவளி பண்டிகை நாளையொட்டி பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பூ விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பூக்களின் விலை உயர்வு
பூக்களின் விலை உயர்வு

By

Published : Nov 13, 2020, 6:29 PM IST

தென்காசி மாவட்டம் கீழபாவூர், சிவகாமிபுரம், சுரண்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பூந்தோட்டம் அமைத்து விவசாயம் செய்துவருகின்றனர்.

இதில் மல்லிகைப் பூ, பிச்சிப் பூ, கேந்தி பூ, வாடாமல்லி, சம்மங்கி, ரோஜா, கனகாம்பரம், தாமரைப்பூ உள்ளிட்ட பூக்கள் விவசாயம் செய்யப்பட்டுவருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகைப்பூ 150 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவந்தது.

தற்போது நாளை தீபாவளி பண்டிகையை கொண்டாடும் நிலையில் பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ஆயிரத்து 300 ரூபாய்க்கும், பிச்சிப்பூ ஒரு கிலோ ஆயிரத்து 650 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பூவின் விலை உயர்வு

மேலும், கனகாம்பரம் பூ ஒரு கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கும் பெங்களூரு ரோஸ் ஒரு கட்டு 250 ரூபாய்க்கும், கேந்திப் பூ ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு வார காலமாக பூ விற்பனை மந்தமாக இருந்த நிலையில் பண்டிகை நாளையொட்டி அதிக விலைக்கு பூ விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மழை காரணமாக மதுரையில் பூக்கள் விற்பனை மந்தம் - வியாபாரிகள் வேதனை

ABOUT THE AUTHOR

...view details