தென்காசி மாவட்டம் கீழபாவூர், சிவகாமிபுரம், சுரண்டை உள்ளிட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள ஏராளமான விவசாயிகள், பூந்தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இதில் மல்லிகைப் பூ, பிச்சிப் பூ, கேந்தி பூ வாடாமல்லி, சம்மங்கி ரோஸ் பூ, கனகா மரம், தாமரைப்பூ உள்ளிட்ட பல்வேறு வகையிலான பூக்கள் விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக சுபமுகூர்த்த நாட்கள் இருந்த நிலையில் பூக்களின் விலை மூன்று மடங்கு அதிகரித்திருந்தது.ஒரு கிலோ மல்லிகை பூ 1200 ரூபாய்க்கு ,பிச்சிப்பூ ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
தென்காசி மலர் சந்தை - பூக்களின் விலை கடும் வீழ்ச்சி! - Tenkasi flower market
தென்காசி:மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், ஒரு கிலோ மல்லிகை பூ 100 ரூபாய்க்கும், பிச்சி பூ ஒரு கிலோ 150 ரூபாய்க்கும் விற்பனை செய்வதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆனால் தற்போது பூக்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டாலும், முகூர்த்த நாட்கள் இல்லாததால் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து மலர் சந்தையிலும் பூக்களின் விலை குறைந்துள்ளது. குறிப்பாக, சிவகாமிபுரம், சுரண்டை உள்ளிட்ட மலர் சந்தையிலும் கடுமையாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ 100 ரூபாய்க்கும், ஒரு கிலோ பிச்சிப்பூ 200 ரூபாய்க்கும், கேந்தி பூ ஒரு கிலோ 30 ரூபாய்க்கு, சம்பங்கி பூ ஒரு கிலோ 30 ரூபாய்க்கு ஊட்டி ரோஸ் ஒரு கட்டு 120 ரூ விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விலை சரிவு இருந்தநிலையிலும், மக்களின் வருகை இல்லாததால் பூ சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் பூ விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்