தென்காசி: சிவகிரி அருகே வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் ஆனி திருவிழாவின்போது பந்தலில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இக்கோயிலில் கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனி திருவிழாவில் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் ஆனி தெற்ப உற்சவம் நடக்க இருந்தது. இந்நிலையில், அப்போது பட்டாசு வெடித்ததில் பந்தல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கிருந்த பதர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனால், ஏராளமானோர் பங்கேற்ற இத்திருவிழாவில் ஏற்பட இருந்த பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
மேலும், தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் வேறு எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் ஆனி திருவிழாவின்போது ஏற்பட்ட தீயை விரைந்த அணைத்த தீயணைப்புத்துறையினர் இதையும் படிங்க: இலங்கை ஆண்ட ராஜராஜ சோழன்! - ஆய்வு நடத்த பொன்.மாணிக்கவேல் கோரிக்கை