தென்காசி மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் சுடலை, இவர் சாலைகளில் கிடக்கும் பழைய பொருட்களை சேகரித்து கடைகளில் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த கழிவுப் பொருட்களை வீட்டில் வைத்து பிரித்துள்ளார்.
அப்போது, திருமண வீட்டில் பயன்படுத்திய ஸ்பிரே டப்பாவை உடைத்தபோது அது எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. அந்தசமயம் வீட்டில் அடுப்பு எரிந்து கொண்டிருந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சுடலை அவரது குழந்தைகள் முத்துக்கனி(12), முத்தாரம்மாள்(10), மூர்த்தி(8), கணேசன்(2), சரண்யா(6) மற்றும் அருகில் இருந்த மாசானம், சரவணன், விஜயகுமார், காளிமுத்து உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.