தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி செய்த பெண் காவலர் - சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு - தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி: விபத்தில் சிக்கிய இளைஞருக்கு முதலுதவி செய்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண் காவலருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருக்கின்றன.

Female Guard First Aid for the Accident person
Female Guard First Aid for the Accident person

By

Published : Jun 12, 2020, 1:52 AM IST

தமிழ்நாட்டில் பல்வேறு இயற்கை சீற்றங்கள், இன்னல்களின் போது நம்மிடையே மனிதாபிமான மிக்கவர்கள் நீட்டும் உதவிக்கரம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். அந்த வகையில், தற்போது தமிழ்நாடு எதிர்கொண்டிருக்கும் கரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நேரத்திலும், பல்வேறு தன்னார்வலர்கள் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

தன்னார்வலர்கள் ஒருபுறம் செயல்பட, அவர்களுக்கு இணையாக பணியின் போது காவலர்களும் உதவிகளை செய்து வருகின்றனர். இதனிடையே, தென்காசி மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய இளைஞருக்கு ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் காவலர், முதலுதவி செய்த நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அவர் உதவி செய்யும் காணொளியும் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, தென்காசி காவல் துறையினருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details