தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ் அவரது மகன் ஃபென்னிக்ஸ். அவர்கள் அதே பகுதியில் செல்போன் கடை நடத்திவந்தனர். இந்த நிலையில் அவர்கள் ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்துவைத்திருந்தது தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதையடுத்து அவர்கள் விசாரணை கைதிகளாக கோயில்பட்டி கிளைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அதையடுத்து அவர்கள் ஜூன் 22ஆம் தேதி உயிரிழந்தனர். அதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கண்டனங்கள் எழுந்துவருகின்றன.