தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருமகளை கொலை செய்த மாமனார் கைது - father in law arrested

செங்கோட்டை அருகே மருமகளின் தவறான நடவடிக்கையால் அவரை கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டார்.

மருமகளை கொலை செய்த மாமனார் கைது
மருமகளை கொலை செய்த மாமனார் கைது

By

Published : Sep 27, 2022, 1:50 PM IST

தென்காசி: செங்கோட்டையை அடுத்துள்ளது லாலாகுடியிருப்பு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கி ராஜ். இவர் சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இவரது முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து விவாகரத்து பெற்று சென்று விட்டார்.

இதன்பின் இவர் மத்தளம்பாறை கிராமத்தைச் சேர்ந்த பத்மாவதி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து உள்ளார். பத்மாவதி (30) யின் நடவடிக்கை காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் பத்மாவதியை அவரது மாமனார் முருகேசன் கண்டித்துள்ளார். பலமுறை அவர் கண்டித்தும் கேட்காததால் இன்று பிற்பகல் பத்மாவதி வீட்டில் இருந்தபோது அவரை கழுத்தை நெரித்தும் தலையணையால் முகத்தை அழுத்தியும் முருகேசன் கொலை செய்துள்ளார்.

இது தொடர்பாக புளியரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அதே கிராமத்தில் தலைமறைவாக இருந்த முருகேசனை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட பத்மாவதியின் உடல் கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:நடிகை ஜெசிக்கா தற்கொலை வழக்கு - காதலன் சிராஜிதீனிடம் 3 மணி நேரம் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details