தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ. 41 லட்சம் மதிப்புள்ள ஆம்பர் கிரீஸ் பதுக்கி வைத்திருந்த தந்தை, மகன் கைது - தந்தை மகன் கைது

செங்கோட்டையில் ரூ.41 லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள ஆம்பர் கிரீஸ்-யை வீட்டில் பதுக்கிவைத்திருந்த தந்தை மகனை போலீசார் கைது செய்தனர்.

ரூ. 41 லட்சம் மதிப்புள்ள ஆம்பர் கிரீஸ் பதுக்கிவைத்திருந்த தந்தை மகன் கைது
ரூ. 41 லட்சம் மதிப்புள்ள ஆம்பர் கிரீஸ் பதுக்கிவைத்திருந்த தந்தை மகன் கைது

By

Published : Nov 23, 2022, 8:53 AM IST

தென்காசி: செங்கோட்டை, விசுவநாதபுரத்தில் ஒரு வீட்டில் விற்பனைக்காக திமிங்கல கழிவு (ஆம்பர் கிரீஸ்) வைத்திருப்பதாக தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மாதவன், தலைமை காவலர் செந்தில் ரமேஷ், ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் விசுவநாதபுரம் தங்கச்சன் (65) என்பவரது வீட்டில் தனிப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டதில், விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.770Kg எடையுள்ள 41,55,000 மதிப்புள்ள திமிங்கல கழிவு இருப்பதை கண்டுபிடித்தனர்.

அதனை கைப்பற்றிய போலீசார் திமிங்கல கழிவை விற்க முயன்ற தங்கச்சன் அவரது மகன் வர்க்கீஸ் (35) இருவரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க: கோவை விமான நிலையத்தில் ரூ.6.5 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details