கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியக் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும், தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்தப்படியே பணிபுரிகின்றனர் அல்லது நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது.
இச்சமயத்திலும் விவசாயிகள் அயராது உழைத்து வருகின்றனர். மக்கள் பலரும் தற்போது காய்கறிகள், பழங்களை நம்பி தான் வாழ்கையை நடத்தி வருகின்றன.
அந்த வகையில், தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கரோனா பீதி காரணமாக விவசாயப் பணிகளுக்கு ஆள் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அப்பகுதியை பொறுத்தவரை சேம்பு கிழங்கு, உளுந்து, சின்ன வெங்காயம் ஆகியவை அதிகளவில் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.
விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை இதுகுறித்து தென்காசி விவசாயிகள் கூறுகையில்," கரோனாவுக்கு பயந்து வீட்டுக்குள் கிடந்தால் விவசாயத்தைப் பாதுகாக்க முடியாது. எங்களுக்கும் கரோனா பீதி உள்ளது. இருப்பினும் விவசாயத்தை கைவிட முடியாது என்பதால் தொடர்ந்து பணியில் ஈடுபடுகிறோம் . வேலைக்கு கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. அதனால் எனது மகன்களை வைத்து களை எடுப்பது உள்ளிட்ட விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்" என வேதனைத் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:கட்டுக்குள் வந்த காய்கறி விலை