தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருப்பாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி - Farmers happy with the opening of water from the Karuppa River Dam

தென்காசி: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுபடி, கருப்பாநதி, அடவிநயினார், கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tenkasi dam  கருப்பாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு  அடவிநயினார் நதி  கடனாநதி  ராமநதி  கருப்பாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி  Farmers happy with the opening of water from the Karuppa River Dam  Tenkasi Dam Water Opening
Tenkasi Dam Water Opening

By

Published : Nov 26, 2020, 7:06 PM IST

தென்காசி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகள் உயர்ந்து வந்த நிலையில் அணையிலிருந்து பசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் உள்ள கருப்பாநதி, அடவிநயினார், கடனாநதி, ராமநதி அணைகளிலிருந்து தண்ணீரை பாசன வசதிக்காக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதன் மூலம், மாவட்டத்தில் 32 ஆயிரத்து 24.58 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். 72.18 அடி கொள்ளவு கொண்ட கருப்பாநதி அணையிலிருந்து 26.11.20 முதல் 30.03.2021 வரை 125 நாள்களுக்கு 25 கன அடி நீர் திறந்து விடப்படும்.

இதேபோல், 85 அடி கொள்ளவு கொண்ட கடனாநதி அணையிலிருந்து 125 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. 84 அடி கொள்ளவு கொண்ட ராமநதி அணையிலிருந்து 60 கன அடி தண்ணீர் திறந்து விடப்படும். 132 அடி கொள்ளவு கொண்ட அடவிநயினார் கோவில் அணையிலிருந்து 100 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இந்த தண்ணீர் திறப்பால் விவசாய மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் கடைமடை விவசாய நிலங்களுக்கு செல்லும் கால்வாய் ஓடைகளை முறையாக தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம், பொதுப்பணி துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:முழு கொள்ளளவை எட்டிய சோத்துப்பாறை அணை: விவசாயிகள் மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details