தென்காசி மாவட்டம் மாதாகோவில் தெரு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி லூர்து அண்டோ ஜெரால்ட். இவரது சொத்துக்களை தென்காசி திமுக நகர செயலாளர் சாதிர் என்பவர் அபகரிக்க முயன்றதாகவும், தனது மனைவியுடன் தகாத உறவில் இருப்பதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேற்றைய தினம் லூர்து அண்டோ ஜெரால்ட் மனு அளித்தார்.
அதிமுக எம்எல்ஏ தூண்டுதலின் பொய் புகார், திமுக நிர்வாகி குற்றச்சாட்டு! - Admk mla
தென்காசி: அதிமுக எம்எல்ஏவின் தூண்டுதல் பேரில் தன்மீது நில அபகரிப்பு, தகாத உறவு என அடுக்கடுக்கான புகார்கள் அளித்து வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் திமுக நிர்வாகி மனு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், திமுக நகர செயலாளர் சாதிர், தனக்கும் அதிமுகவை சேர்ந்த தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியனுக்கும் அரசியல் ரீதியாக முன் விரோதம் இருந்து வருவதாகவும், தனது அரசியல் வாழ்க்கைக்கு இடையூறு கொடுக்க வேண்டும் என்பதற்காக லூர்து என்பவரை பயன்படுத்தி தன் மீது பொய் புகார்கள் அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, பொய் புகார்கள் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணனிடம் அளித்த புகாரில் சாதிர் தெரிவித்துள்ளார்.