தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன். இவர், கடந்த நவம்பர் மாதம் தென்காசி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஃபேஸ்புக்கில் சமீரன் என்ற பெயரில் செயல்பட்டு வந்தார். இதனிடையே அவரது பெயரில் போலி கணக்கு உருவாக்கி, நண்பர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அடையாளம் தெரியாத நபர் ஈடுபட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு! - தென்காசி மாவட்ட ஆட்சியர்
தென்காசி மாவட்ட ஆட்சியர் ஃபேஸ்புக் கணக்கைப் போன்று, போலி கணக்கு உருவாக்கி மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு! Collector](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10665115-353-10665115-1613567907678.jpg)
Collector
இந்தநிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன், போலியான கணக்கு உலாவருவதை அறிந்து மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பெயரில் செயல்பட்ட போலி கணக்கு முடக்கப்பட்டது. மேலும் அவரது பெயரிலுள்ள போலி கணக்கில் ஏதேனும் குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.