தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவு; கடையநல்லூர் அருகே இளைஞர் மீது தாக்குதல்!

Extramarital affairs Issue: கடையநல்லூர் அருகே திருமணத்தை மீறிய உறவில் விவகாரத்தில் இளைஞரை தாக்கிய ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய நான்கு பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

extramarital affair issue Attack on a youth near Kadayanallur
கடையநல்லூர் அருகே வாலிபர் மீது தாக்குதல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 8:48 PM IST

தென்காசி:கடையநல்லூர் அருகே உள்ள போகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (27). இவருக்குத் திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தங்கராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கராஜ் தற்போது வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பி உள்ளார். இவர் மனைவியுடன் குடும்பம் நடத்தாமல் கடையநல்லூரில் தனியாக வீடு பிடித்து குடியிருந்து வந்துள்ளார்.

மேலும் தங்கராஜ் நல்லூர் பகுதியில் வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் போகநல்லூரைச் சேர்ந்த சுப்பையாபாண்டி, அவருடைய மகன் மற்றும் மூன்று நபர்கள் சேர்ந்து
இன்று காலை 6 மணி அளவில் கடையநல்லூர் அரசு மருத்துவமனை அருகே டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தங்கராஜ் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்னின் கணவர் மற்றும் மாமனார் மற்றும் உறவினர்கள் தங்கராஜை வழிமறித்து சரமாரியாக தாக்கினார். அப்போது டீ கடையிருந்த 50 லிட்டர் பால் கொட்டப்பட்டது, காலை சிற்றுண்டிகள் தூக்கி வீசப்பட்டது. இந்த சம்பவத்தால் டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்த தாக்குதலில் தங்கராஜ் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அதன் பின்னர் தாக்கியவர்கள் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். அதில் ஒருவரை மட்டும் அருகில் இருந்தவர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பின்னர் அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த தங்கராஜை மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தங்கராஜ் கடையநல்லூர் காவல் துறையினர் புகார் செய்தார். தங்கராஜ் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தங்கராஜை தக்கிவிட்டு தப்பிச் சென்ற நான்கு பேரையும் காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வேலை வாங்கி தருவதாக கூறி வடமாநிலத்தவர்கள் கடத்தல்.. 7 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details