தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குற்றால அருவிக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை நீட்டிப்பு! - குற்றால அருவி

தென்காசி: தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவில் இருந்து கோயில்கள், பொது போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில் குற்றால அருவிக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Extension of ban on public access to Courtallam Falls!
குற்றால அருவி

By

Published : Sep 1, 2020, 10:26 PM IST

தென்காசி மாவட்டம் குற்றாலத்தை பொருத்தவரை ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என 3 மாதங்களும் சுற்றுலாப் பயணிகளின் சீசன் காலமாகும். இந்த சீசன் காலங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள்.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைத்து அருவிகளிலும் புனித நீராடி புது உற்சாகத்துடன் செல்வது வழக்கம். ஆனால், இந்தாண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால். பொதுமக்கள் கூடும் இடமான சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சீசன் பொறுத்தவரை திட்டமிட்டபடி ஆரம்ப கட்டத்திலிருந்து அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து இருந்து வந்தது. அவ்வப்போது அருவிகளில் வெள்ளபெருக்கும் ஏற்பட்டது. ஆனால் ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் அதற்கான தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்து சீசன் முடியும் தருவாயிலும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சுற்றால பயணிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சுற்றுலாப் பயணிகளை நம்பி இருக்கும் குற்றாலா தெருவோர வியாபாரிகளும் தடை உத்தரவு நீட்டிப்பால் வேதனை அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details