தென்காசியில் இருந்துடெல்டா மாவட்டங்களை இணைக்கும் வகையில் பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையின் படி தற்போது இந்த இணைப்பு மயிலாடுதுறை - திண்டுக்கல் இடையே இயங்கி வரும் 16847/16848 ரயிலையும், மதுரை - செங்கோட்டை 06665/06662 ரயிலையும் ஒன்றாக இணைத்து ஒரே ரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் 16847 மயிலாடுதுறையிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும். மறு மார்க்கத்தில் செங்கோட்டை மயிலாடுதுறை விரைவு ரயில் 16848 செங்கோட்டையிலிருந்து காலை 07.00 மணிக்குப்புறப்பட்டு மாலை 05.10 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேரும்.
இந்த ரயில்கள் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.