தென்காசி: கடையநல்லூர் பகுதியில் வசித்துவரும் சிவன்மாரி என்பவர் இந்திய ராணுவத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவர் ஹவில்தாராகப் பணியாற்றியபோது, அவர் சொந்த ஊர் பகுதியில் இலவச ராணுவப் பயிற்சி அகாதமி தொடங்கி 900-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களை ராணுவத்தில் சேர்க்க உதவிபுரிந்துள்ளார்.
இந்த நிலையில், ஹவில்தார் சிவன்மாரி நேற்று (ஜனவரி 3) பணி ஓய்வுபெற்ற நிலையில், தனது சொந்த ஊரான கடையநல்லூருக்கு இன்று (ஜனவரி 4) திரும்பினார். ரயில் மூலம் சொந்த ஊர் திரும்பிய ஹவில்தாருக்கு கடையநல்லூர் ரயில் நிலையத்தில் வைத்து ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்று திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.