தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்!

தென்காசி: தேர்தல் நன்னடத்தை குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது.

தென்காசியில் தேர்தல் நன்னடத்தை ஆலோசனைக் கூட்டம்  தேர்தல் நன்னடத்தை ஆலோசனைக் கூட்டம்  தேர்தல் ஆலோசனைக் கூட்டம்  Election Consultative Meeting  Election Probation Consultative Meeting  Election Probation Consultative Meeting in Tenkasi  Election consultation meeting in Tenkasi
Election consultation meeting in Tenkasi

By

Published : Mar 6, 2021, 9:50 AM IST

தமிழ்நாட்டில், சட்டப்பேரவை பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில், நேற்று (மார்ச்5) மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தேர்தல் நன்னடத்தை குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சமீரன் தலைமையில் வகித்தார். இதில், நகை அடகு தொழில் புரிபவர்கள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் ஆகிய உரிமையாளர்கள், உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு தலைமைவகிக்கும் மாவட்ட ஆட்சியர் சமீரன்

இக்கூட்டத்தில், அரசியல் கட்சியினருக்கு மண்டம் வாடகைக்கு விடுவது தொடர்பாக வட்டாட்சியரிடம் தெரிவித்தல், மண்டபங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தவிர்ப்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:திமுக உள்கட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் - வாக்குவாதம், கைகலப்பு!

ABOUT THE AUTHOR

...view details