தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தென்காசி மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் தேர்தல் குறித்த விழிப்புணர்வுகள் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்நிலையில், தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சமீரன் தொடங்கிவைத்தார்.
கரகாட்டத்துடன் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்தப் பேரணியில் பெண்கள் கரகாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் கையில் பொதுமக்கள் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விளம்பர பதாகைகள் ஏந்தியபடி பேரணியில் கலந்து கொண்டனர்.
இப்பேரணியானது தென்காசி ரயில் நிலையம் முன்பு தொடங்கி முக்கிய நகர்புறம் வழியாக காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பு நிறைவடைந்தது.
கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்டிய தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி