தமிழ்நாடு அரசு சில தினங்களுக்கு முன்பு ஐஏஎஸ் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. அதனடிப்படையில் தென்காசி மாவட்டத்திற்கு நான்காவது மாவட்ட ஆட்சியராக சென்னை குடிநீர் வழங்கல் பிரிவில் இயக்குநராக பணியாற்றிய ஆகாஷ் நேற்று (ஜூன் 16) பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அலுவலர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வந்த நிலையில், சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அலுவலர் சுப்பிரமணியனும் ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.