தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிமராமத்து பணிகளில் கோடிக் கணக்கில் முறைகேடு: திமுகவினர் பகிரங்கக் குற்றச்சாட்டு - kudimaramathu corruption

தென்காசி: குடிமராமத்துப் பணிகளில் கோடிக் கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக திமுகவினர் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திமுகவினர்
திமுகவினர்

By

Published : Jun 30, 2020, 6:02 AM IST

தென்காசி மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக
திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன் தலைமையில், நேற்று பொதுப்பணித் துறை அலுவலர்களைச் சந்தித்து, திமுகவினர் முறையிட்டனர்.

பின்னர், அது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிவ பத்மநாதன், “தென்காசி மாவட்டத்தில் 61 குளங்களில் குடிமராமத்துப் பணிகளைச் செய்வதற்காக 43 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல்கள் வந்துள்ளன.

மொத்த தொகையில் 10 சதவீதம் மட்டுமே குளங்கள் பராமரிப்புப் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மீதி 90 சதவீத தொகை பல்வேறு மட்டங்களில் கமிஷனாக செல்வதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக எந்தெந்த குளங்களில் குடிமராமத்துப் பணிகளுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை ஒரு வாரத்துக்கு முன்பே அதிகாரிகளிடம் கேட்டோம். ஆனால், இதுவரை அந்த பட்டியலையும் அவர்கள் கொடுக்கவில்லை.

எனவே, திமுக சட்டப் பாதுகாப்புக் குழுவினருடன் சென்று பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டோம். ஆனால், இன்னும் எங்களுக்கு பட்டியல் வரவில்லை. குடிமராமத்துப் பணிகளில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக உரிய ஆதாரங்களைப் பெற்று நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details