தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’பழைய நோட்டுகளைப் போல் அதிமுகவை செல்லா நோட்டுகள் ஆக்குவோம்’ - உதயநிதி - உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

தென்காசி: வரும் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்தால் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டை மோடியிடம் விற்றுவிடுவார் என்றும், பழைய நோட்டுகளைப் போல் அதிமுகவை செல்லா நோட்டுகள் ஆக்குவோம் எனவும் பரப்புரையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் தென்காசி தேர்தல் பரப்புரை
உதயநிதி ஸ்டாலின் தென்காசி தேர்தல் பரப்புரை

By

Published : Mar 24, 2021, 8:09 AM IST

சட்டப்பேரவை பொதுத் தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியின் திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின், தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அலை வீசியதாகக் கூறப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் திமுகவை அதிக இடங்களில் மக்கள் வெற்றி பெற வைத்த காரணத்தால் மக்கள் மீது மோடி கோபத்தில் இருக்கிறார். வரும் தேர்தலில் அதிமுகவிற்கு அளிக்கிற வாக்கு அதிமுக வாக்கு இல்லை, அது பாரதிய ஜனதாவிற்கு அளிக்கின்ற வாக்கு ஆகும்.

உதயநிதி ஸ்டாலின் பரப்புரை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டை மோடியிடம் அடகு வைத்துள்ளார். இந்தத் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்தால் தமிழ்நாட்டை மோடியிடம் விற்றுவிடுவார். எனவே 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாக்காசுகளாக அவர்கள் அறிவித்ததுபோல், வரக்கூடிய தேர்தலில் அவர்களையும் செல்லாத நோட்டுகள் போன்று மாற்றுவோம்" எனப் பேசினார்.

இதையும் படிங்க:பட்டாசு தொழிலை முறைப்படுத்த நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details