தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாமிரபரணி தண்ணீர் வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் - தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம்

தென்காசி: வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதிக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்க கோரி திமுக தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டம்

By

Published : Sep 22, 2020, 4:14 AM IST

தென்காசி மாவட்ட வாசுதேவநல்லூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு திமுக பேரூர் செயலாளர் சரவணன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த வாசுதேவநல்லூர் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. இங்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் இருந்தும் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. நாள் ஒன்றுக்கு 14 லட்சம் லிட்டர் தாமிரபரணி தண்ணீரை முழுமையாக வழங்க வேண்டும்.

கோட்டை மலையாறு மூலமாக புளியங்குடி, சங்கரன்கோவில் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தாமிரபரணி தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் மேல் நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். மேலும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்டமாக அனைத்துக்கட்சி சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details