தென்காசி:திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உதயமாகி ஓராண்டு கடந்த நிலையில், புது மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணியானது பல்வேறு குளறுபடிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில், ஆயிரப்பேரி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அப்பகுதி விவசாய நிலம் எனவும், பொதுமக்கள் வந்து செல்ல முறையான வசதியில்லை எனவும் கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, தென்காசி அரசு மருத்துவமனை அருகில் 13 ஏக்கர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டது. 119 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அரசு விழாவான இந்நிகழ்ச்சிக்கு திமுக, அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.