தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் ஸ்டாலின் பேனரை கிழித்தெறிந்த திமுகவினர் - தென்காசியில் உட்கட்சி கோஷ்டி பூசல்

தென்காசியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பேனர் வைக்க மறுப்பு தெரிவித்த திமுக நிர்வாகியின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பேனர் வைக்க மறுப்பு தெரிவித்த திமுக நிர்வாகி
முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பேனர் வைக்க மறுப்பு தெரிவித்த திமுக நிர்வாகி

By

Published : Feb 18, 2023, 8:38 PM IST

தென்காசி: ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து, தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியுள்ள சூழலில், தென்காசி மாவட்டத்தை அமைப்பு ரீதியாக திமுகவினர் வடக்கு மாவட்டம், தெற்கு மாவட்டம் என்று இரண்டாக பிரித்து தங்களது நிர்வாகிகளை நியமனம் செய்து கட்சிப் பணியாற்றி வருகின்றனர். ஆரம்பத்தில் நன்றாக போன இவர்களின் கட்சி பணிகள் உட்கட்சி கோஷ்டி மோதலாக உருவெடுத்துள்ளது.

தென்காசியில் உட்கட்சி கோஷ்டி மோதல்

இந்த நிலையில், தென்காசி நகரப் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக தென்காசி நகர சேர்மன் சாதீர், தென்காசி நகரில் உள்ள முக்கிய பகுதிகளில் பேனர் வைத்துள்ளார். இதுபிடிக்காத திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் அதிருப்தி தெரிவித்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காசிவிசுவநாதர் கோயில் அருகில் வைக்கப்பட்டிருந்த பேனரை திமுக நிர்வாகி ஒருவர் கிழித்து எரியும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரே பேனர் வைக்க முயன்ற திமுகவினரை, தென்காசி நகர துணை தலைவர் சுப்பையா, பேனர் வைக்க கூடாது என கூறி பிரச்சினையில் ஈடுபட்ட சம்பவம் குறித்தான வீடியோவும் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:கோவை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

ABOUT THE AUTHOR

...view details