தென்காசி மாவட்டம் தமிழ்நாடு சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டுப்போட்டிகள் இன்று (ஜூன் 17) தொடங்கியது. தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் வைத்து, இரண்டு நாட்களுக்கு (ஜூன் 17, 18) இந்த மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுகிறது.
இதனை பள்ளி தலைமை ஆசிரியர் செந்தூர்ப்பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு சதுரங்க கழக இணைச்செயலாளர் நாசர், இரேம், பெருமாள், டேனியல் ஆகியோர் பங்கேற்றனர். இந்தப் போட்டிகள் 15 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் மட்டுமே பங்கு பெறும் வகையில் நடத்தப்படுகிறது.
இதில் 7 அரசுப்பள்ளிகள், 21 தனியார் பள்ளிகள் என மொத்தம் 28 பள்ளிகளில் இருந்து 140 மாணவர்கள், 30 மாணவிகள் என மொத்தம் 170 பேர் பங்கேற்றனர். இன்றும், நாளையுமாக மொத்தம் 9 சுற்றுகளாக நடைபெறும் போட்டிகளுக்கு சர்வதேச நடுவரான பழனியப்பன் நடுவராக பங்கேற்றுள்ளார்.
தென்காசியில் தமிழ்நாடு சதுரங்க கழகத்தின் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் தொடக்கம்! விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு சுழற்கோப்பை வழங்கப்படவுள்ளது. மேலும், மாநில அளவிலான போட்டியிலும் வெற்றி பெறுபவர்கள் தகுதி பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஹாங்காங்கை வீழ்த்திய இந்தியா - ஆசிய கோப்பை கால்பந்து சுற்றுக்கு தகுதி