தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமெடுத்த நிலையில், மாநில அரசு ஊரடங்கு உத்தரவை மீண்டும் கடுமையாக்கி உள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவித்தது.
முழு ஊரடங்கு: விதிகளை மீறுபவர்களை எச்சரிக்கும் காவல் துறை - தென்காசியில் முழு ஊரடங்கு
தென்காசி: முழு ஊரடங்கு விதிகளை மீறி அநாவசியமாக வெளியில் சுற்றித் திரிபவர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
தொடர்ந்து முழு ஊரடங்கின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும், ஊரடங்கில் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 9 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, 800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்கள், செவிலியர்கள், கரோனா முன்கள பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்பவர்கள் தவிர தேவையின்றி வெளியே சுற்றியவர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர்.