புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால், அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் எடுத்துவருகிறது.
அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ், மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, தீயணைப்புத் துறை, வேளாண்மை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ், “தென்காசி மாவட்டத்தில் வெள்ளம் சூழும் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
தென்காசியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! மேலும், மாவட்டத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரப்பளவில் தென்னை மரங்கள் உள்ளன. அவற்றின் தலைப்பகுதியில் கனத்தை குறைப்பது குறித்தும், காப்பீடு தொகை குறித்தும் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று தென்காசி மாவட்டத்திற்குப் புயல் நேரத்தில் பேரிடர் மீட்புக் குழு தேவைப்படின் நெல்லை மாவட்டத்திலிருந்து வரவழைக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...புயலைச் சமாளிக்க தயார் - திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்