தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழை நீரில் மூழ்கி முளைவிடத் தொடங்கிய மானாவாரி பயிர்கள்: விவசாயிகள் வேதனை! - தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழையால்,அறுவடைக்கு தயாராக இருந்த மானாவாரி பயிர்கள், மழைநீரில் மூழ்கி, சேதமடைந்து, முளைவிடத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

முளைவிடத் தொடங்கிய  மானாவாரி பயிர்கள்
முளைவிடத் தொடங்கிய மானாவாரி பயிர்கள்

By

Published : Jan 17, 2021, 9:59 PM IST

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், வீரகேரளம்புதூர், திருவேங்கடம், சிவகிரி, ஆலங்குளம் உள்ளிட்ட தாலுகாக்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் உளுந்து, பாசி பயறு, மக்காச்சோளம், சோளம், தட்டாம் பயிறு உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

ஏற்கனவே தாமதமாக தொடங்கிய பருவமழையால் காலம் தாழ்த்தியே விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கினர். இந்தநிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் நீரில் மூழ்கி தற்போது அவைகள் மீண்டும் முளைத்து வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நீரில் மூழ்கி வீணான பயிர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தென்காசியில் வீரகேரளம்புதூர் தாலூகா பலபத்திரராமபுரம், திருவேங்கடம் தாலுகா கே. ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

இதையும் படிங்க:காட்டு யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்!

ABOUT THE AUTHOR

...view details