தென்காசி மாவட்டத்தில் கரோனோ வைரஸ் தொற்று பரவாமல் இருக்க காவலர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். 144 தடை உத்தரவால் உணவகங்கள் பெரும்பாலாவை அடைக்கப்பட்டிருப்பதால் உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பதில் கூட போலீஸாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
கரோனா பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவிக்கரம் - விஜய் ரசிகர்கள் மன்றம்
தென்காசி: கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
இதையடுத்து தன்னார்வலர்கள் பலர் ஆர்வமுடன் தாமாக முன்வந்து போலீஸாருக்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் தென்காசி பகுதியில் பணிபுரிந்து வரும் போலீஸாருக்கு தண்ணீர் கேன், பிஸ்கட் பாக்கெட் ஆகிய உணவு பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டினர்.
தென்காசி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் சிவா தலைமையில் 150 தண்ணீர் கேன்களை போலீஸாருக்கு வழங்கப்பட்டது. இதேபோல் தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கும், போலீஸாரும் ஏராளமான தொண்டு பணிகளை செய்து வருகின்றனர்.