தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலநாதர் குழல்வாய்மொழியம்மை திருக்கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தில் திருக்குற்றாலநாதர், குழல்வாய்மொழியம்மை மற்றும் இலஞ்சி முருகப்பெருமான் தெப்பத்தில் பவனி வருகிற தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தெப்பத் திருவிழா நேற்று (ஜன.30) வெகு விமர்சையான நடைபெற்றது. காலையில் இலஞ்சி குமாரனை குற்றாலம் கோயிலுக்கு அழைத்து வந்து இளைப்பாற செய்து சாமி, அம்பாள், முருக பெருமானுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து காலை முதல் திருவனந்தல், உதயமார்த்தாண்டம், விளாபூஜை, உச்சிகால பூஜை, சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தது.