தென்காசி: குற்றாலத்தில் ஒவ்வொரு வருடமும் ஜூன் - ஜூலை மாதங்கள் தொடக்கத்தில் சீசன் களை கட்டி வருவது வழக்கம். மேலும் குற்றாலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவதும் வழக்கம். கிட்டத்தட்ட 10,000 மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் தினசரி வருகை தருவார்கள்.
அதேபோல் இந்த ஆண்டும் சீசன் களை கட்டியதோடு, குற்றாலம் பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று வாரங்களாக அருவிகளில் நீர் வரத்து குறைந்து, சீசன் இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகளில் வரத்தும் குறைந்ததால் இங்குள்ள வியாபாரிகள் கடுமையான நஷ்டத்திற்கு தள்ளப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் இன்று மதியம் பிரதான அறிவியல் மெயின் அருவியை (மெயின் அருவி) சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை அணைக்கும் பணியில் தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.