தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் ஆரம்பம்! - தென்காசியில் கரோனா சித்தமருத்துவம்

தென்காசி: தனியார் கல்லூரியில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டு மூலிகை உணவுகள், யோகா பயிற்சி என கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவத்தின் மூலம் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

கரோனா சித்த மருத்துவம்
கரோனா சித்த மருத்துவம்

By

Published : Jul 21, 2020, 8:07 PM IST

தென்காசி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களை தென்காசி அரசு மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையங்களில் வைத்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், மாவட்டத்தில் முதற்கட்டமாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில் ஆயக்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 156 படுக்கை வசதியுடன் சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஆண், பெண் என தற்போது 57 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் அவர்களுக்கு மூன்று வேளைகளும் மூலிகை உணவுகள், மாலை சிற்றுண்டியாக சிறுதானிய உணவுகள், அவித்த நிலக்கடலை ஆகியவை அங்கேயே பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுவருகின்றன. அமுக்கரா மாத்திரை, பிரம்மானந்த பைரவ மாத்திரை, மூலிகை தேநீர், மூலிகை ஆவி பிடித்தல் ஆகிய மருத்துவச் சிகிச்சைகளும், உடல் தகுதித்திறனுக்காக திருமூல ஆசன் பயிற்சிகளும் வழங்கப்பட்டுவருகின்றன.

பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிக்க மருத்துவர்கள், செவிலியர் உட்பட 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சிகிச்சைகள் மூலம் நோயாளிகள் விரைவில் குணமடைவார்கள் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details