கரோனா பரவலைத் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் பாதிக்கப்படாதவாறு அத்தியாவசியப் பொருள்கள் அவர்களுக்குக் கிடைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவினர் 90 பேர், உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில்சென்னையிலிருந்து திருநெல்வேலி வந்தடைந்தனர்.
கரோனா தடுப்பு: திருநெல்வேலியில் பேரிடர் மீட்புக் குழு - கரோனா செய்திகள்
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகத் திருநெல்வேலி மாவட்டத்திற்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவினர் 90 பேர் வந்தடைந்தனர்.
அவர்கள் பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 144 தடை உத்தரவின் இறுதிநாள் வரை உள்ளுர் காவல் துறையுடன் இணைந்து மூன்று குழுக்களாகப் பிரிந்து கரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வர். அதில், காய்கறிச் சந்தைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்துதல், சமூக இடைவெளியைப் பின்பற்றவைத்தல், நோய் அறிகுறிகள் உள்ளவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பணிகள் அடங்கும்.
இதையும் படிங்க:தனிமைப்படுத்துதல்: தப்பியவா்களை கண்டுபிடிக்க மத்திய சுகாதாரத்துறை நடவடிக்கை