தென்காசி:நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளநிலையில், தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, தென்காசி அருகிலுள்ள பாவூர்சத்திரம் இலங்கை அகதிகள் முகாமில், 9 குடும்பங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கரோனோ தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.