கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ள நிலையில், திருவண்ணாமலையிலிருந்து தென்காசி மாவட்டத்திற்கு வழிபாட்டிற்கு வந்த திரு ஓடு(65) என்ற சாமியார் ஒருவர், மூலிகைத் திருநீறு பூசும் எங்களை கரோனா தாக்காது எனக் கூறிவருகிறார்.
திருநீறு பூசும் எங்களை கரோனா அண்டாது - சாமியார் - கரோனா செய்திகள்
தென்காசி: திருநீறு பூசும் எங்களை கரோனா தாக்காது என திருவண்ணாமலையைச் சேர்ந்த சாமியார் ஒருவர் கூறிவருகிறார்.
![திருநீறு பூசும் எங்களை கரோனா அண்டாது - சாமியார் tenkasi-samiyar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6613753-thumbnail-3x2-l.jpg)
tenkasi-samiyar
சாமியார் திரு ஓடு(65)
அது குறித்து கூறிய அவர், எட்டு வயதிலிருந்து சாமியாராக இருக்கிறேன். மூலிகைத் திருநீறை தினமும் பூசுவதால் என்னை நோய் பாதித்ததில்லை. அதேபோல் கரோனா வைரஸ் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார். அவர் கூறுவது வேடிக்கையாக உள்ளது என அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:5 மணிநேரம் மண் குழிக்குள் இருக்கும் சாமியார்: பக்தர்கள் பரவசம்