தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆரம்பத்தில் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது உள்ளூர் மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
தென்காசியில் இன்று மேலும் 178 பேருக்கு கரோனா உறுதி! - கரோனா உயிரிழப்பு நிலவரம்,
தென்காசி: மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 178 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,186ஆக உயர்ந்துள்ளது.
Corona damage exceeds 2,000 in Tenkasi!
மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் (ஆகஸ்ட் 1) 178 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,186ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 925 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இதையும் படிங்க:திருப்பத்தூரில் இன்று புதிதாக 22 பேருக்கு கரோனா!