தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரத்தைச் சேர்ந்த மிஸ்பா நூருல் ஹபிபா, அப்சான், ஷாஜிதா சைனத் ஆகிய மாணவிகள் கரோனா தொற்றுப் பரவல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யோகா பயிற்சி செய்தனர். இதை முன்னிட்டு தலையில் கரோனா கிருமி உருவம் பொறித்த தொப்பி, முகக்கவசம், கையுறை உள்ளிட்டவற்றை அணிந்திருந்தனர்.
இது குறித்து மிஸ்பா நூருல் ஹபிபா கூறும்போது, "நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே யோகாப் பயிற்சி செய்து வருகிறேன். பல மாநில, தேசிய, சர்வதேச யோகாப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளேன். காமன்வெல்த் போட்டிகளுக்கும் தேர்வாகியுள்ளேன். அதுமட்டுமில்லாது பல்வேறு விழிப்புணர்வுகளை வலியுறுத்தி யோகாப் பயிற்சிகளை செய்துள்ளேன். ஆறாவது உலக யோகா தினத்தை முன்னிட்டு கரோனா தொற்றுப் பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யோகாப் பயிற்சி செய்துள்ளேன்.