தென்காசி மாவட்ட விவசாயிகளின் 48 வருடம் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணிக்கு ரூ.41 கோடியே 8 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒதுக்கினார்.
தற்போது அங்கு கால்வாய் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கையகப்படுத்திய விளைநிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்குவது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.
இதனால் அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து புகார் மனு அளித்து வந்தனர். நேற்று (ஜன.5) மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது.