வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் வடமாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் சுரண்டையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மாவட்ட தலைவர் பழனி தலைமையில் 150-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.