தென்காசி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளான செங்கோட்டை, கடையம், சுரண்டை, பாவூர்சத்திரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் தென்காசி அரசு தலைமை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இங்கு கரோனா நோயாளிகளுக்கும் சிறப்பு வார்டுகளில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தென்காசி அரசு மருத்துவமனையை மேம்படுத்த கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்! - ஆக்ஸிஜன் சிலிண்டர்
தென்காசி: மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் நிர்வாக செயல்பாட்டை மேம்படுத்திட கோரி மருத்துவமனையின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தென்காசி தலைமை அரசு மருத்துவமனையை மேம்படுத்திட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மருத்துவமனையை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைகள் மேம்படுத்தப்பட வேண்டும், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அதிகளவு கொள்முதல் செய்ய வேண்டும், மருத்துவமனைக்கு வரும் புற நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ உபகரணங்கள், படுக்கை வசதி, மருத்துவர்கள், செவிலியர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.