மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 10 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
'போராட்டக்காரர்களின் கொடியா? போலீசாரின் தடியா?' - தடையை மீறி ஆர்ப்பாட்டம் - தென்காசியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 439 பேர் கைது
தென்காசி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்டோர் மீீீது காவல் துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.
!['போராட்டக்காரர்களின் கொடியா? போலீசாரின் தடியா?' - தடையை மீறி ஆர்ப்பாட்டம் தென்காசியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:52:22:1607440942-tn-tki-04-former-protest-fir-tn10038sdmp4-08122020201726-0812f-1607438846-677.jpg)
தென்காசியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, சங்கரன்கோவில், புளியங்குடி, சுரண்டை, கடையம், ஆயக்குடி ஆகிய பகுதிகளில் மத்திய அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள் முன்பு தடையை மீறி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர.
மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்ததுடன் 439 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.