தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஆட்டோ ஓட்டுனருக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

தென்காசி: வீ.கே.புதூரில் காவல்துறையால் அடித்து சித்ரவதை செய்யப்பட்டதாக கூறப்பட்ட ஆட்டோ ஓட்டுனர், உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும், சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Communist party demonstrates demanding compensation for auto driver killed by police
Communist party demonstrates demanding compensation for auto driver killed by police

By

Published : Jul 9, 2020, 2:36 AM IST

தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் உயர்நிலைப் பள்ளி தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் (25). இவர் மீது செந்தில் என்பவர் கொடுத்த இடப்பிரச்சனை சம்பந்தமான புகாரின் பேரில், கடந்த மே மாதம் 8ஆம் தேதி அன்று காவல்துறை விசாரணைக்கு சென்றுள்ளார்.

அங்கு குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் காவலர் குமார் ஆகியோர் லேசாக அடித்து எச்சரித்து விட்டு அனுப்பியதாக கூறப்படுகிறது.

மீண்டும் மே 10 ஆம் தேதியன்று விசாரணைக்கு வரச் சொல்லிய காரணத்தால் குமரேசனும் வி.கே.புதூர் கவல்நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அவரை இரு காவலர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து குணரேசன் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் கடந்த 26ஆம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரழந்தார்.

இச்சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பின்னர் இளைஞரை தாக்கிய இரு காவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து உறவினர்கள் உடலை அடக்கம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று (ஜூலை8) தென்காசியில் மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் உயிரிழந்த சம்பவத்திற்கு காவல் துறையின் தாக்குதல்தான் காரணம் எனக் கூறியும், இரு காவலர்கள் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்யவும், உயிரிழந்த தொழிலாளி குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி, 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: மின் ஒயரை மிதித்த விவசாயி, அவரது வளர்ப்பு நாய் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details