தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா: விசைத்தறி கூடங்களை மூடும் உரிமையாளர்கள்

தென்காசி: சங்கரன்கோவில் பகுதியில் கரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து இன்று முதல் 31ஆம் தேதி வரை விசைத்தறிக் கூடங்களை மூட விசைத்தறி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Closure of power looms due to corona spread in tenkasai
Closure of power looms due to corona spread in tenkasai

By

Published : Jul 20, 2020, 11:42 PM IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சுப்புலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஐந்தாயிரம் விசைத்தறிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் நேரிடையாகவும் , மறைமுகமாகவும் சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலை, வேட்டி, துண்டுகள் உள்ளிட்டவை வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் சங்கரன்கோவில் பகுதியில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு மற்றும் சுகாதாரத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு விசைத்தறிக் கூடங்களை மூடி தொழில் நிறுத்தம் செய்ய விசைத்தறி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சங்கரன்கோவில் பகுதியில் விசைத்தறிக் கூடங்கள் இன்று செயல்படவில்லை. உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஏற்றுமதியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் துணிகள் தேக்கமடைந்து நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details