தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த நாரணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு செல்வி என்பவர் ஆட்டோ ரிக்ஷா சின்னத்தில் போட்டியிடுகிறார். நாரணாபுரம் வாக்குச்சாவடியில் நேற்று (அக்டோபர் 6) காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றுவந்தது.
இந்தச் சூழ்நிலையில், நேற்று மாலை திடீரென வேட்பாளர் செல்வி தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தத் தகராறின்போது செல்வியின் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த நாரணாபுரம் காவல் துறையினர் வாக்குச்சாவடி முன்பு குவிந்தனர். தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.